
கரோனா அலையின் உச்சத்தைக் கடந்துவிட்டோம்.. சொல்கிறது சீனா
பெய்ஜிங்: கரோனா அலையின் உச்சத்தை சீனா கடந்துவிட்டதாக அறிவித்திருக்கும், அந்நாட்டு அரசு, நாள்தோறும் புதிய பாதிப்பு மற்றும் மருத்துவமனைகளில் கரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சுகாதாரத் துறை நிபுணர்கள் தரப்பிலோ, நிலவரமும், அந்நாட்டு அரசு அளிக்கும் புள்ளிவிவரமும் வேறுபடுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிக்க.. மோடியால் தங்கிக் கொள்ள முடியுமா? சுப்ரமணியன் சுவாமி டிவீட்
சீன நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில், நாட்டில் கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஜனவரி முதல் வாரத்தில் உச்சத்தைத் தொட்டதாகவும், அதன்பிறகு பாதிப்பு குறைந்து வருவதாகவும் தற்போது 70 சதவீதமாகக் குறைட்நதிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. லேப்டாப், கைப்பேசி பயன்பாட்டால் வரும் கழுத்து வலி; தீர்வு?
அதே வாரத்தில் கரோனா பாதித்து மரணமடைவோரின் எண்ணிக்கையும் மிகக் கடுமையாக இருந்ததாகவும், அதன்பிறகு குறைந்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு உச்ச நிலையைக் கடந்துவிட்டதாகவும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும் சீனா தெரிவித்திருந்தாலும், பெரும்பாலான சர்வதேச வல்லுநர்களோ, சீனாவின் புள்ளிவிவரங்கள் மிகவும் நம்பமுடியாதவை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க.. ஷ்ரத்தாவைக் கொன்றுவிட்டு அஃப்தாப் செய்த துணிச்சலான செயல்