ஸ்பெயினில் காட்டுத்தீ: 4900 ஏக்கர் நிலங்கள் சேதம்
ஸ்பெயினில் இரண்டாவது நாளாகத் தொடரும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதம்


கிழக்கு ஸ்பெயினில் நேற்று (நவம்பர் 3) ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 4900 ஏக்கர் நிலங்கள் தீயில் கருகின.
கிழக்கு ஸ்பெயினின் வாலென்சியா பகுதியில் வெள்ளிக்கிழமை திடீரென வீசிய புயல் காற்றினால் ஏற்பட்ட காட்டுத்தீ அப்பகுதி முழுவதும் பரவியது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள நான்கு நகரங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயானது தொடர்ந்து இரண்டாவது நாளாக பரவி வருகிறது. அதனையொட்டி அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...