
காஸா எல்லையில் இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேலிய ராணுவம், காஸாவின் மற்ற பகுதிகளில் இருந்து வடக்கு காஸாவைத் துண்டித்தது. ஹமாஸுக்கும் ராணுவத்துக்கும் இடையில் போர் வலுக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துண்டிக்கப்பட்ட பகுதியில் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது முறையாக இணைய அலைபேசி தொடர்புகள் முடக்கப்பட்டுள்ளன.
காஸாவில் பலியான பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 10,000-த்தைக் கடந்திருப்பதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் உருவான 75 ஆண்டுக்காலத்தில், இந்தப் போர் இத்தனை குறுகிய காலத்தில் மிக அபாயகரமானதாக உருமாறியுள்ளது.
ஒரு மாதமாக நீடிக்கும் போரில் 32-வது நாளான இன்று (அக்.7) இஸ்ரேல், காஸாவில் மருத்துவமனை பயன்படுத்தும் சூரிய மின்சக்தி தகடுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
மருத்துவமனைகளில் எரிபொருள் கையிருப்பு தீர்ந்த நிலையில் சூரிய மின்சக்தி தகடுகள் மூலமாக மின்சாரம் பெறப்பட்டு வந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல் நோயாளிகளின் நிலையை இன்னும் மோசமாக்கும் எனக் கருதப்படுகிறது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்ததிற்கான தீர்மானம் மீண்டும் தோல்வியடைந்துள்ளது. உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்தைப் பெற இயலாததால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
இதையும் படிக்க: இது நம் அனைவருக்குமான போர் - இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்கா, மனிதத்துவ அடிப்படையில் தற்காலிக போர் இடைவெளி கோரியது. மற்ற நாடுகள் மனிதத்துவ போர் நிறுத்தத்திற்கு குரல் கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...