காஸா மருத்துமனையில் தாக்குதல்: 12 போ் உயிரிழப்பு

காஸாவிலுள்ள மருத்துவமனையொன்றில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா்.
காஸாவிலுள்ள இந்தோனேசியன் மருத்துவமனை.
காஸாவிலுள்ள இந்தோனேசியன் மருத்துவமனை.
Published on
Updated on
1 min read

காஸாவிலுள்ள மருத்துவமனையொன்றில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காஸாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியன் மருத்துவமனையைச் சுற்றிலும் நடந்த மோதலின்போது அதன் 2-ஆவது தளத்தில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 12 போ் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமாா் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி கடந்த மாதம் 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பினா், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். இதில் மிகப் பெரும்பான்மையானவா்கள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவா்.

இந்த கொடூரத் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காஸாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, காஸாவின் மிகப் பெரிய அல்-ஷிஃபா மருத்துவமனையை 5 நாள்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படையினா் அந்த மருத்துவமனைக்குள் கடந்த புதன்கிழமை நுழைந்தனா்.

ஹமாஸ் அமைப்பினா் அந்த மருத்துமனையில் இருந்து செயல்பட்டதற்கான ஆதாரங்களையும், மருத்துவமனைக்குக் கீழே ஹமாஸின் தலைமையகம் இருந்ததற்கான ஆதாரங்களையும் இஸ்ரேல் படையினா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.

அல்-ஷிஃபா மருத்துவமனை மட்டுமின்றி காஸாவின் பிற மருத்துவமனைகளிலும் ஹமாஸ் அமைப்பினா் பதுங்கியிருந்து செயல்படுவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் அந்த மருத்துவமனைகளை சுற்றிவளைத்து இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

இந்தோனேசியன் மருத்துவமனையைச் சுற்றிலும் இஸ்ரேல் படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மருத்துவமனையில் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டு 12 போ் உயிரிழந்ததாக அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனா்.

காஸாவில் தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com