மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

காஸாவுக்குள் செல்லும் மனிதாபிமான உதவிகள்!

காஸாவில் 4 நாள் போர் நிறுத்தத்தையடுத்து உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குச் செல்கின்றன.

News image

ரஃபா எல்லையில் இருந்து காஸாவுக்குள் செல்லும் லாரிகள்.

Updated On :24 நவம்பர் 2023, 12:35 pm

காஸாவில் 4 நாள் போர் நிறுத்தத்தையடுத்து உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் காஸாவுக்குச் செல்கின்றன.

கடந்த அக். 7-ஆம் தேதி பாலஸ்தீனத்தின் காஸாவில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது எதிர்பாராத திடீர் தாக்குதல் நடத்தியதையடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. காஸாவை பழைய நிலைக்கு மீட்டெடுக்க பல  ஆண்டுகள் ஆகுமென அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். 

Story image

இஸ்ரேல் போரினால் காஸா மக்கள் அத்தியாவசியமான உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி தவிக்கின்றனர். மின்சாரம், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. 

Story image

இந்நிலையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் 4 நாள்களுக்கு போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் பலரும் தங்கள் பகுதிகளுக்கோ அல்லது வெளியிலோ இடம்பெயர்ந்து வருகின்றனர். மேலும் ஒப்பந்தப்படி, பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 

Story image

போர் நிறுத்தத்தையடுத்து எகிப்தின் ரஃபா எல்லையில் இருந்து காஸாவுக்குள் உணவு, எரிபொருள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் நிரம்பிய லாரிகள் சென்ற வண்ணம் இருக்கின்றன. 

தெற்கு காஸாவுக்குள் 4 எரிபொருள் லாரிகள் நுழைந்துள்ளதாக இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது. அது எகிப்து மற்றும் ஐ.நா. அனுப்பியதாகவும் கூறியுள்ளது. 

Story image

மேலும் உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்துகள் என அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய சுமார் 200 லாரிகள் இன்று காஸாவுக்குச் செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

அதேநேரத்தில் போர் நிறுத்தத்திலும், இஸ்ரேலின் ராணுவ வாகனங்களும் காஸாவுக்குள் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.