காஸாவில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் இஸ்ரேல் ராணுவம் மேற்குக் கரையில் ஹமாஸின் மூத்த தலைவர்கள் உள்பட ஆதரவாளர் வீடுகளைத் தகர்த்து வருகிறது.
போர் ஆரம்பித்த முதல் வாரம் தொடங்கி இஸ்ரேல், மேற்குக் கரை பகுதியில் தொடர் சோதனைகளும் சந்தேகப்படுவோரை கைது செய்வதும் சுட்டுக் கொல்வதுமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஹமாஸின் மூத்த தலைவரான அரசியல் பிரிவு துணை தலைவர் சலே அல்-அரூரியின் வீடு தகர்க்கப்பட்டிருக்கிறது. அக்.7 தாக்குதலில் அவருக்கு பெரும் பங்கு இருக்கலாம் என நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக தேடலில் இருப்பவருக்கு அமெரிக்கா 2018-ல் அவரைக் குறித்து தகவல் தந்தால் 5 மில்லியன் டாலர் சன்மானமாக வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் தனது வீட்டில் இல்லை. லெபனானில் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஐ.நா.வின் தரவுகளின் படி மேற்குக் கரையில் இதுவரை 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 120-க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ள விடியோவில் இஸ்ரேல் ராணுவம் மேற்குக் கரை பகுதியில் சாலையில் வைத்து ஒரு இளைஞரைச் சுடும் காட்சி பதிவாகியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு எதிராக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். “போர் நிறுத்தத்திற்கான அழைப்பு என்பது இஸ்ரேலை ஹமாஸிடமும் பயங்கரவாதத்திடமும் சரணடைய செய்வதற்கான அழைப்பு. அது நடக்காது. போரில் வெல்லும் வரை போராடுவோம்” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


