தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாகிஸ்தான்: கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலி, 12 பேர் காயம்

News image
Updated On :1 ஏப்ரல் 2024, 8:23 am

DIN

பாகிஸ்தானில் கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை மற்றும் பனிப்புயல் பெய்து வருகிறது. இதில் 27 வீடுகள் சேதமடைந்தன.

மேலும் இந்த இயற்கை சீற்றத்துக்கு எட்டு குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வியாழன் அன்று கைபர் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மழை மற்றும் பனிப்புயல் ஆகியே இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.