நிலவில் இப்ப என்ன நேரம்? : நாசாவுக்கு அறிவுறுத்திய அமெரிக்கா!

அமெரிக்கா வலியுறுத்தல்: நிலவில் ஒருங்கிணைந்த நேர அளவு அமைக்க நாசா முனைப்பு
அலபாமாவில் உள்ள கடிகார கோபுரத்துக்கு பின்புறம் உதிக்கும் நிலவு
அலபாமாவில் உள்ள கடிகார கோபுரத்துக்கு பின்புறம் உதிக்கும் நிலவுஏபி

நிலவுக்கான ஒருங்கிணைந்த நிலையான நேர அளவை நிறுவ, விண்வெளி மையமான நாசாவிடம் அமெரிக்க தலைமையகம் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்வெளி போட்டி நாடுகளுக்கிடையே தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்கா சர்வதேசளவில் விண்வெளி நெறிமுறைகளை வகுக்க முனைப்பு காட்டி வருகிறது.

வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் பிரிவின் தலைவர் நாசாவிடம், ஒருங்கிணைந்த நிலவு நேரத்துக்கான திட்டத்தை மற்ற அரசு அமைப்புகளுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்குள் வடிவமைக்குமாறு கேட்டுள்ளதாக ரைட்டர்ஸ் செய்தி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி மையம் 2023-ல் இதே போலான திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் பல்வேறு நாடுகளின் விண்வெளி அமைப்புகள் கலந்து கொண்ட நெதர்லாந்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொதுவான நிலவு நேரம் உருவாக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் முன்வைத்தனர்.

இதிலுள்ள தொழில்நுட்ப சிக்கல் என்னவென்றால் பூமியை விட நிலவில் ஈர்ப்பு சக்தி குறைவு, கடிகாரம் அங்கு விரைவாக இயங்கும், நாளொன்றுக்கு 56 மைக்ரோசெகன்ட் அதிகரித்து கொண்டேவரும். மேலும் நிலவில் ஒரு நாள் என்பது பூமியில் 29.5 நாள்கள்.

ஆகவே நாஸா மற்றும் மற்ற விண்வெளி மையங்கள், ‘ஒருங்கிணைந்த சந்திரமண்டல நேரம்’ அல்லது ‘சந்திர மண்டல நிலையான நேரம்’ அமைப்பதில் ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com