இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்படும்: ஈரான் சூளுரை!

ஈரானின் ஆதரவாளர்கள் போராட்டம்; பதிலடி உறுதி
சிரியாவில் கொல்லப்பட்ட ஈரானிய ஆயுத படை வீரர்
சிரியாவில் கொல்லப்பட்ட ஈரானிய ஆயுத படை வீரர்ஏபி

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிக் காவல் படையின் உறுப்பினர்களுக்கான இறுதியஞ்சலி செலுத்த, வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகரில் குவிந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

சிரிய நாட்டின் தலைநகரில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது திங்கள்கிழமை இஸ்ரேல் நடத்தியதாக நம்பப்படும் வான்வழி தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் 2 தளபதிகள் 5 அதிகாரிகள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர். அதில் சிரிய நாட்டினர் நால்வரும் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்த ஒருவரும் அடக்கம்.

ஈரானின் மற்ற நகரங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க உள்நாட்டு அழுத்தம் உருவாகி வருகிறது.

தெஹ்ரான் பல்கலைக்கழகம் நோக்கி செல்லும் இந்த பேரணியில் புரட்சி காவல் படையின் தளபதி ஹுசைன் சலாமி பேசவுள்ளார்.

சலாமி, “எந்த அபாயமும் பதிலளிக்கமால் கடக்க போவதில்லை” என குறிப்பிடுவது இஸ்ரேல் மீதான தாக்குதலை குறிப்பதாக தெரிகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரில் ஈரானின் நேரடி தலையீடு இருக்குமானால் இந்த போர் பிராந்தியங்களை கடந்து விரிவடையும் அபாயம் உருவாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com