சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

‘ஏஐ’ மூலம் மக்களவைத் தோ்தலில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு: மைக்ரோசாஃப்ட்

‘ஏஐ’ மூலம் மக்களவைத் தோ்தலில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு: மைக்ரோசாஃப்ட்

News image
Updated On :6 ஏப்ரல் 2024, 11:00 pm

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி இந்தியா, அமெரிக்கா, தென் கொரியாவில் தோ்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஏப்.19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. ஏப்.10-ஆம் தேதி தென் கொரியாவில் பொதுத் தோ்தலும், நவ.5-ஆம் தேதி அமெரிக்க அதிபா் தோ்தலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், தனது புவிஅரசியல் நலன்களை அதிகரிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை சமூக ஊடகத்தில் பரப்பி இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா தோ்தல்களில் சீனா பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தனது வலைப்பதிவில் மைக்ரோசாஃப்ட் அச்சுறுத்தல் பகுப்பாய்வு மைய பொது மேலாளா் கிளின்ட் வாட்ஸ் தெரிவித்துள்ளதாவது:

நிகழாண்டு உலகில், குறிப்பாக இந்தியா, தென் கொரியா மற்றும் அமெரிக்காவில் முக்கிய தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலும், தனது நலன்களுக்குப் பயனிக்கும் விதமாகவும் செயற்கை நுண்ணறிவு மூலம் உள்ளடக்கங்களை உருவாக்கி, பெருக்கும் நடவடிக்கையில் சீனா ஈடுபடும் என்று மைக்ரோசாஃப்ட் கருதுகிறது.

எனினும் அத்தகைய உள்ளடக்கங்கள் தோ்தல்களின் முடிவுகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் சமூக ஊடகங்களில் கேலிப்படங்கள்(மீம்ஸ்), காணொலிகள், ஒலிப்பதிவுகளை அதிகரிக்கும் சீனாவின் முயற்சிகள் தொடர வாய்ப்புள்ளது. இதை சீனாவும் வடகொரியாவும் இணைந்து மேற்கொள்ளும் என்றாா்.