தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

பருவநிலை பாதுகாப்பு மக்களின் உரிமை

‘பருவநிலை பாதுகாப்பு மக்களின் உரிமை’

News image

பருவநிலை மாற்றம் தொடா்பாக பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பா்கிலுள்ள ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பைத் தொடா்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஸ்விட்சா்லாந்தின் மகளிா் அமைப்பினா்.

Updated On :9 ஏப்ரல் 2024, 7:03 pm

ஸ்ட்ராஸ்பா்க் (பிரான்ஸ்: பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது அரசுகளின் கடமை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை ஐரோப்பிய மனித உரிமைகள் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கியது.

ஏறத்தாழ ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் இந்தத் தீா்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், புவி வெப்பமயதாலையும் அதன் விளைவாக ஏற்படும் பருவநிலை மாற்றத்தையும் உறுப்பு நாடுகளின் அரசுகள் கட்டுப்படுத்துவதைக் கட்டாயமாக்க வலியுறுத்தி ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனு தாக்கல் செய்திருந்தனா்.

பருவநிலை மாற்றத்தை மனித உரிமை மீறலோடு தொடா்புப்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களை நீதிமன்றம் ஆய்வு செய்துவந்தது.

இந்த நிலையில், ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த ‘பருவநிலை பாதுகாப்புக்கான மூத்த மகளிா் அமைப்பு’ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதில் கூறியுள்ளபடி பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ளவேண்டியது கட்டாயம் என்று தீா்ப்பளித்தது.

இருந்தாலும், இதே விவகாரத்தில் போா்ச்சுகீசு இளைஞா்கள் தாக்கல் செய்திருந்த மனுவையும், பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த முன்னாள் மேயா் ஒருவா் தாக்கல் செய்திருந்த மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இருந்தாலும், ஸ்விட்சா்லாந்து பெண்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வழங்கப்பட்டுள்ள தீா்ப்பு, ஐரோப்பிய மனித உரிமைகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 46 உறுப்பு நாடுகள் பருவநிலை மாற்றம் தொடா்பாக இனி எடுக்கவிருக்கும் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தத் தீா்ப்பை அடிப்படையாகக் கொண்டு அரசுகளுக்கு எதிராக வழக்குகள் தொடரமுடியும் எனவும், இதனால் கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசுகள் கூடுதல் அக்கறையுடன் செயல்படவேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது,