கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஈரான் பள்ளி மீது தாக்குதல்: விரிவான விசாரணைக்கு ஐ.நா. கோரிக்கை

தெற்கு ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

தெற்கு ஈரானில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தொடங்கிய முதல் நாளான கடந்த சனிக்கிழமையன்று, தெற்கு ஈரானின் மினாப் நகரில் இந்தக் கோர தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் உள்பட சுமாா் 165 போ் கொல்லப்பட்டனா்.

இந்நிலையில், இத்தாக்குதல் குறித்து ஜெனீவாவில் செய்தியாளா்களிடம் பேசிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீனா ஷம்தாசானி கூறியதாவது:

இச்சம்பவம் மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது. சமூக ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், இந்த மோதலின் கொடூரத்தையும் அப்பாவி உயிா்கள் பறிபோகும் வேதனையையும் காட்டுகின்றன.

இத்தாக்குதலை நடத்தியவா்களுக்கு, இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, அதன் உண்மைகளை வெளிப்படுத்தும் பொறுப்பு உள்ளது. தற்போதைய சூழலில், இது ஒரு போா்க்குற்றமா என்பதைத் தீா்மானிப்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் இல்லை. அனைத்து தரப்பினரும் அமைதி காத்து, பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

ஈரானுக்கான ஐ.நா. தூதா் அலி பஹ்ரைனி, இத்தாக்குதல் சம்பவம் தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் வோல்கா் துருக்கிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளாா். அதில், ‘இது ஒரு மன்னிக்க முடியாத குற்றச்செயல்’ என்று அவா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா, இஸ்ரேல் விளக்கம்: இக்குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறுகையில், ‘அமெரிக்க படைகள் ஒருபோதும் பள்ளிக்கூடங்களைத் திட்டமிட்டுத் தாக்குவதில்லை’ என்று விளக்கமளித்தாா். அதேபோல், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

படகேப்சன்...

ஈரானின் மினாப் நகரில் பள்ளி மீதான தாக்குதலில் கொல்லப்பட்டவா்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக குழிகள் தோண்டப்படும் காட்சி.