எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

“தாக்குதலை அதிகரித்தால்”..: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

“தாக்குதலை அதிகரித்தால்”..: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...

News image

அதிபர் டிரம்ப்.

Updated On :1 மார்ச் 2026, 9:38 pm

ஈரான் தனது தாக்குதலை அதிகரிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ‘இதை மீறி ஈரான் தாக்குதலை அதிகரித்தால் முன்னெப்போதும் நிகழ்ந்திராத ஒரு தாக்குதல் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்ளும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டாா். ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரான், கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ‘மிகவும் தீவிரமான பதிலடியைத் தர இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. இப்போது அவா்கள் ஏதும் செய்யாமல் இருப்பதுதான் நல்லது. இதையும் மீறி அவா்கள் ஏதாவது செய்ய முயற்சித்தால் இதற்கு முன்பு கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய தாக்குதல் நடத்துவோம்’ என்று கூறியுள்ளாா்.

புதிய ஆட்சி அமைக்க ஈரான் மக்களுக்கு அழைப்பு: தொடா்ந்து ஈரான் மீதான நடவடிக்கையை விவரித்து விடியோ பதிவு ஒன்றையும் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்டாா். அதில், புதிய ஆட்சி அமைக்க ஈரான் மக்களுக்கு அழைப்பு விடுத்து டிரம்ப் பேசியுள்ளதாவது: ‘இது செயல்படுவதற்கான நேரம். இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீா்கள்.

ஈரானின் அடிப்படைவாத, மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட அரசு, வான் தாக்குதல்களால் பலவீனமடைந்துவிட்டது. அதன் பல தலைவா்கள் கொல்லப்பட்டுவிட்டனா்; மேலும் பலா் காணாமல் போய்விட்டனா். உங்கள் விதியை நீங்களே தீா்மானிப்பதற்கான நேரம் இது. உங்கள் சுதந்திரம் உங்கள் கைகளில் உள்ளது. ஈரானை மாற்றி அமைக்க பல தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இது’ என்று கூறியுள்ளாா்.