ஹாங்காங் கட்டட தீ விபத்தில் 5 பேர் பலி, 36 பேர் காயம்

ஹாங்காங்கில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.
ஹாங்காங் கட்டட தீ விபத்தில் 5 பேர் பலி, 36 பேர் காயம்
Published on
Updated on
1 min read

ஹாங்காங்: ஹாங்காங்கில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.

ஹாங்காங்கின் ஜோர்டான் பகுதியில் உள்ள நியூ லக்கி ஹவுஸ் என்ற கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் புதன்கிழமை காலை 7.53 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹாங்காங் கட்டட தீ விபத்தில் 5 பேர் பலி, 36 பேர் காயம்
வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்... 25 லட்சம் லிட்டராக சரிந்த ஆவின் பால் கொள்முதல்!

இந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியானதாகவும், 36 பேர் காயமடைந்தனர். கட்டடத்திற்குள் சிக்கிக்கொண்டவர்களிடம் இருந்து உதவி கேட்டு அழைப்புகள் தொடர்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

நியூ லக்கி ஹவுஸ் 1964 இல் கட்டப்பட்ட பழமையான கட்டடமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com