மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கூகுள் நிறுவனத்துக்கு விதித்த ரூ.400 கோடி அபராதத்தை ரத்து செய்ய முடியாது: ரஷியா நீதிமன்றம்

கூகுள் நிறுவனத்துக்கு விதித்த ரூ.421 கோடி அபராதத்தை ரத்து செய்ய முடியாது என்று ரஷியா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஏப்ரல் 2024, 9:56 am

2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைனுடனான போருக்குப் பிறகு, உள்ளடக்கம், சென்சார், தரவுகள் தொடர்பாக வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷியா முரண்பட்டுள்ளது

ரஷியா குறித்து தீவிரவாதத்தைத் தூண்டும் வகையிலான கருத்துகள் இருந்ததாகவும், அதனை நீக்கக்கோரியதற்கு கூகுள் நிறுவனம் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டது.

ரஷியாவை குறிப்பிட்டு உக்ரைன் உள்ளிட்ட அரசியல் விவகாரங்களில் தவறான தகவல்களை நீக்காமல் வைத்திருந்ததற்காக ஆல்ஃபாபேட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளுக்கு ரூ. 400 கோடி அபராதத்தை மாஸ்கோ நீதிமன்றம் விதித்தது.

இந்நிலையில், அபராத்தை ரத்து செய்யக்கோரிய கூகுள் நிறுவனத்தின் கோரிக்கையை ரஷியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த வழக்கு குறித்து கூகுள் நிறுவனத்தின் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரபூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.