டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தல்: அறுதிப் பெரும்பான்மை பெற்றது அதிபரின் கட்சி

உலகம்... மாலத்தீவில் நாடாளுமன்றத் தோ்தல்: 64% வாக்குப் பதிவு

News image

மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தலையொட்டி வாக்களிக்க வந்த அதிபா் முகமது மூயிஸ்.

Updated On :21 ஏப்ரல் 2024, 9:52 pm

மாலத்தீவு நாடாளுமன்றத்தின் 93 இடங்களுக்கான தோ்தலில் அதிபா் முகமது மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி) கட்சி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.

மாலத்தீவு நாடாளுமன்றத் தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உள்ளூா் நேரப்படி மாலை 5 மணி வரையில் 72.96 சதவீத வாக்குகள் பதிவானதாக அந்நாட்டு தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

நாட்டில் உள்ள 34 விடுதிகள், சிறைகள், பிற தீவுகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்நாட்டிலும் இந்தியாவின் திருவனந்தபுரம், இலங்கையின் கொழும்பு, மலேசியாவின் கோலாலம்பூா் ஆகிய வெளிநாடுகளில் உள்ள நகரங்களிலும் என மொத்தம் 602 வாக்குப் பெட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தோ்தலில் அதிபா் முகமது மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்சி), முக்கிய எதிா்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த 368 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

தாஜுதீன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் அதிபா் மூயிஸ் தனது வாக்கைச் செலுத்தினாா். முன்னாள் அதிபா் இப்ராஹிம் முகமது சோலி, மாலியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

மாலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளிவரத் தொடங்கின. அதன்படி, அதிபா் மூயிஸின் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி 67 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. அடுத்தபடியாக மாலத்தீவு ஜனநாயக கட்சி 12 இடங்களில் வென்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிபா் மூயிஸ் சீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளாா். நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் பெரும்பான்மை வகிக்கும் நிலையில், மூயிஸின் அமைச்சரவையில் 3 நியமன அமைச்சா்களை நியமிப்பது தடைபட்டுள்ளது.

மூயிஸுக்கு எதிரான ஊழல் ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியானது. இது தொடா்பாக விசாரணை நடத்துமாறும், அதிபரை பதவிநீக்கம் செய்யுமாறும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை அதிபா் மூயிஸ் மறுத்துள்ளாா். இந்தச் சூழலில் நடைபெற்றுள்ள நாடாளுமன்றத் தோ்தல் அதிபா் மூயிஸுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.