விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமெரிக்காவின் மிக வேகமான ரயில்: 2028 முதல் பயணிக்கலாம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் முதல் லாஸ் வேகாஸ் வரையிலான மிக வேகமான ரயில் திட்டத்துக்கான பணிகள் இன்று தொடங்கியுள்ளன.

News image
Updated On :22 ஏப்ரல் 2024, 3:17 pm

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் முதல் லாஸ் வேகாஸ் வரையிலான மிக வேகமான ரயில் திட்டத்துக்கான பணிகள் இன்று (ஏப். 22) தொடங்கியுள்ளன.

2028 முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஃபுளோரிடாவைச் சேர்ந்த பிரைட்லைன் வெஸ்ட் என்ற நிறுவனம் இத்திட்டத்தை நிறுவி செயல்படுத்தவுள்ளது. லாஸ் வேகாஸ் முதல் லாஸ் ஏஞ்சலீஸ் வரை 350 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த அதிவேக ரயில் பயணிக்கவுள்ளது. இந்த இடைப்பட்ட நகரங்களுக்கு இடையே பயணிக்க முன்பு 5 மணிநேரம் ஆன நிலையில், அதிவேக ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 40 நிமிடங்களில் பயணிக்கலாம். 300 கிலோமீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணிக்கும்.

Story image

போக்குவரத்துத் துறைக்காக 8.2 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை செயலாளர் பீடே புட்டிகிகே தெரிவித்துள்ளார்.

மியாமி முதல் ஓர்லாண்டோ வரை 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ரயிலை பிரைட்லைன் வெஸ்ட் நிறுவனம் ஏற்கெனவே இயக்கி வருகிறது. ஒரு நாளுக்கு 16 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பாஸ்டன் முதல் வாஷிங்டன் வரை 241 கிலோமீட்டர் வேகத்தில் மற்றோரு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.