சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

ஈரானிய பிரதமர் இலங்கைக்கு வருகை!

News image

இப்ராஹிம் ரைஸி (கோப்புப் படம்)

Updated On :24 ஏப்ரல் 2024, 9:33 am

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில் ஈரானிய பிரதமர் இப்ராஹிம் ரைஸி புதன்கிழமை இலங்கைக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானில் மூன்று நாள் பயணத்தை முன்னிட்டு, அதற்கு முந்தைய நாள் ஒரு நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றுள்ளார் ரைஸி.

அவரது வருகையை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பயணிக்கிற வழியில் கூடுதல் பாதுகாப்புக்காக சாலைப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் வருகை புரிந்துள்ள ஈரானிய பிரதமர், தாமதமாக கட்டி முடிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு வளர்ச்சித் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நீர்ப் பாசனம் மற்றும் நீர் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் இது.

மேலும், பிரதமர் ரைஸியின் வருகையின் சிறப்பம்சம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுவூட்டும் வகையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளதாக பிரதமர் அலுவலக செய்திப் பிரிவு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.