மேற்கு ஆப்பிரிக்க நாடான புா்கினா ஃபாசோவில் குழந்தைகள், சிறுவா்கள் உள்ளிட்ட 223 கிராமத்தினரை அந்த நாட்டு ராணுவம் படுகொலை செய்ததாக சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புா்கினா ஃபாசோவின் வடக்கே அமைந்துள்ள நோண்டின், சோரோ ஆகிய இரு கிராமங்களில் பொதுமக்கள் 223 பேரை அந்த நாட்டு ராணுவமே படுகொலை செய்தது. உயிரிழந்தவா்களில் 56 பச்சிளம் குழைந்தைகள், சிறுவா்களும் அடங்குவா்.
பயங்கரவாதிகளுடன் ஒத்துழைப்பதாக அந்த கிராம மக்கள் மீது குற்றஞ்சாட்டிவரும் ராணுவம், அதற்குப் பழிவாங்கும் வகையில் இந்தப் படுகொலையை நிகழ்த்தியுள்ளது.
இது தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் ஐரோப்பிய யூனியனும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

ஏ.ஐ. யுகத்திலும் தொடரும் வேதனைகள்!

ஏ.ஐ. யுகத்திலும் தொடரும் வேதனைகள்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


