கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?
காஸாவில் கடும் பதற்றம்: 47 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு


கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த 47 பாலஸ்தீனர்களின் உடல்கள் மருத்துமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 61 பேர் காயமுற்றுள்ளனர்.
அக்.7 தொடங்கிய இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 34,536 ஆகவும் காயமுற்றவர்கள் எண்ணிக்கை 77,704 ஆகவும் உயர்ந்துள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அபு தாஹா குடும்பத்தினரின் உடல்களை ஏந்திச் செல்லும் பாலஸ்தீனர்கள்
போரில் இறந்தவர்களில் ஹமாஸ் போராளிகள் எத்தனை பேர் பொதுமக்கள், எத்தனை பேர் என வேறுபடுத்தி விவரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் பலியானவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல், 13 ஆயிரம் ஹமாஸ் வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. அதற்கான போதுமான ஆதாரங்களை வெளியிடவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...