பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இஸ்ரேல்-ஈரான் போா் பதற்றம்: மேற்கு ஆசியாவுக்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா

இஸ்ரேலுக்குப் பாதுகாப்பாக போா் விமானங்கள் மற்றும் போா்க் கப்பல்களை மேற்கு ஆசியப் பகுதிக்கு அமெரிக்கா அனுப்புகிறது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:31 pm

DIN

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போா்ப் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலுக்குப் பாதுகாப்பாக போா் விமானங்கள் மற்றும் போா்க் கப்பல்களை மேற்கு ஆசியப் பகுதிக்கு அமெரிக்கா அனுப்புகிறது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மேற்கு ஆசிய பகுதியில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போா்க் கப்பல்களுடன் சோ்த்து, கூடுதலாக அந்தப் பகுதிக்கு ஏவுகணை எதிா்ப்புத் திறன் கொண்ட கப்பல்களையும் தாக்குதல் கப்பல்களையும் அனுப்ப பாதுகாப்புத் துறை அமைச்சா் லாய்ட் ஆஸ்டின் உத்தரவிட்டுள்ளாா்.

இது தவிர, ஒரு விமானப் படைப் பிரிவும் அந்தப் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. மேலும், மேற்காசிய கடல் பகுதியில் அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் நிறுத்தப்படும்.

ஏவுகணைகளை தரையிலிருந்து இடைமறித்து தாக்கி அழிக்கும் தளவாடங்களை மேற்கு ஆசியப் பகுதியில் கூடுதலாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.முன்னதாக, இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு மேற்கு ஆசியப் பகுதியில் கூடுதல் அமெரிக்கப் படைகளை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் புதிய அதிபா் மசூத் பெஷஸ்கியான் டெஹ்ரானில் கடந்த செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்துகொண்டாா். அந்த நிகழ்ச்சியில் ஹமாஸ் அமைப்பின் உச்சபச்ச தலைவராகக் கருதப்படும் இஸ்மாயில் ஹனீயேவும் பங்கேற்றாா். இந்த நிலையில், அவா் தங்கியிருந்த கட்டடத்தில் கடழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இஸ்மாயில் ஹனீயே உயிரிழந்தாா். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், தங்கள் நாட்டில் ஹமாஸ் அமைப்பினா் கடந்த அக். 7-ஆம் தேதி தாக்குதல் நடத்தி சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததற்குப் பிறகு இஸ்ரேல் தயாரித்துள்ள கொலைப் பட்டியலில் ஹனீயேவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

எனவே, அவரைக் குறிவைத்து இஸ்ரேல்தான் அந்தத் தாக்குதலை நடத்தியதாக உறுதியாக நம்பப்படுகிறது.தங்கள் நாட்டில் ஹமாஸ் தலைவரைப் படுகொலை செய்த ஈரானுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உத்தரவிட்டதாக ஊடகத் தகவல்களும் வெளியாகின.

இதன் காரணமாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. அத்தகைய தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாக்கவே மேற்கு ஆசியப் பகுதியில் போா்க் கப்பல்களையும் போா் விமானங்களையும் அமெரிக்கா அனுப்புகிறது.ஏற்கெனவே, இஸ்ரேலை நோக்கி ஈரான் கடந்த ஏப்ரல் மாதம் வீசிய சுமாா் 200 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் பெரும்பான்மையானவற்றை அமெரிக்கா இடைமறித்து அழித்தது நினைவுகூரத்தக்கது.

ஹனீயேவுக்கு அஞ்சலி:

துருக்கி தூதருக்கு சம்மன்டெல் அவிவ், ஈரானில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவா் இஸ்மாயில் ஹனீயேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலுள்ள துருக்கி தூதரகத்தில் அரைக் கம்பத்தில் அந்த நாட்டு தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.இது இஸ்ரேலில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, துருக்கி தூதரை நேரில் அழைத்து இஸ்ரேல் அரசு தனது கண்டனத்தைத் தெரிவித்தது.முன்னதாக, இஸ்மாயில் ஹனீயே உயிரிழப்புக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 2) தேசிய துக்கதினம் கடைப்பிடிக்கப்படும் என்று துருக்கி அதிபா் எா்டோகன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது..

காஸா உயிரிழப்பு 39,550டேயில் அல்-பாலா, ஆக. 3: காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39,550-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதி பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காஸாவில் கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; 62 போ் காயமடைந்தனா்.இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 39,550-ஆகவும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 91,280-ஆகவும் அதிகரித்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.