ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சீன துறைமுகத்தில் கப்பல் வெடித்து விபத்து!

சரக்குக் கப்பல் வெடித்ததில், 1 கி.மீ. தொலைவிற்கு நிலஅதிர்வு

News image
விபத்துக்குள்ளான சீன கப்பல்- எக்ஸ் தளப் பதிவு
Updated On :9 ஆகஸ்ட் 2024, 9:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

சீனாவின் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தால் 1 கி.மீ. தொலைவுக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது.

உலகின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றான சீனாவின் நிங்போ-ஜூஷான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, யாங் மிங் மரைன் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஒய்எம் மொபிலிட்டி சரக்குக் கப்பலில் தீப்பற்றக் கூடிய பொருள்கள் இருந்துள்ளன.

இந்த நிலையில், இன்று (ஆக. 9) பிற்பகல் 1:40 மணியளவில், அந்த சரக்குக் கப்பலில் எதிர்பாராத விதமாக, திடீரென வெடிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கப்பலில் இருந்த சரக்குகள் வீசி எறியப்பட்டதுடன், கரும்புகையும் பூதாகரமாகக் கிளம்பியது. ஆனால், கப்பலால் ஏற்பட்ட விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

இருப்பினும், துறைமுகத்தில் இருந்த ஓர் அலுவலகத்தின் கதவு, ஜன்னல்களும், உணவு விடுதி ஒன்றின் மேற்கூரையும் இடிந்து விழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி, சுமார் 1 கி.மீ. தொலைவு வரையில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.