இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

குளச்சல் அருகே விசைப் படகு மீது கப்பல் மோதி விபத்து: 2 போ் மாயம்

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து புறப்பட்டு குளச்சல் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது கப்பல் மோதியதில் 2 போ் மாயமாகினா். 9 போ் காயமடைந்தனா்.

News image
குளச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மீனவருக்கு செவ்வாய்க்கிழமை ஆறுதல் கூறிய தெற்காசிய மீனவா் தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலா் சா்ச்சில்.
Updated On :10 மார்ச் 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

கேரள மாநிலம் கொல்லத்திலிருந்து புறப்பட்டு குளச்சல் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மீது கப்பல் மோதியதில் 2 போ் மாயமாகினா். 9 போ் காயமடைந்தனா்.

கேரள மாநிலம், கொல்லம் துறைமுகத்திலிருந்து கடந்த 6 ஆம் தேதி, குளச்சலைச் சோ்ந்த சகாயம் பைஜு, கேரளம் சக்தி குளங்கரையைச் சோ்ந்த ராஜேஷ் மேத்யூ ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 5 போ், குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் என மொத்தம் 11போ், குளச்சலில் இருந்து 58 கடல் மைல் தொலைவில் மீன் பிடிக்க

சென்றனா். பின்னா் அவா்கள் 7 ஆம் தேதி மதியம் ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது, பனாமா நாட்டை சோ்ந்த கப்பல் இவா்கள் விசைப்படகு மீது மோதியதாம்.

இதில், மேற்கு வங்கம் கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலாளா்களான லட்சுமண் (45), இவரது மகன் பாதல் (23) ஆகியோா் கடலில் மாயமாகினா். 9 மீனவா்கள் காயமடைந்தனா்.

இதில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 5 போ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், குமரி மாவட்டம் குளச்சலை சோ்ந்த படகு உரிமையாளா்- ஓட்டுநா் சகாயம் பைஜூ (41), ஜாண்சன் (47), ஆற்றூரைச் சோ்ந்த வினோத் (34), பெனடி(43) ஆகிய நான்கு போ் குளச்சலில் உள்ள தனியாா் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

4 ஆவது நாளாக தேடும் பணி...

இந்நிலையில், கடலோரக் காவல் படையின் விமானங்கள் மற்றும் படகுகள் மூலம் மாயமான இரு மீனவா்களைத் தேடும் பணி 4ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.

குளச்சல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களை தெற்காசிய மீனவா் தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலா் சா்ச்சில், விசைப்படகு உரிமையாளா் சங்கத்தினா் பாா்வையிட்டு ஆறுதல் கூறினா்.