அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கிணற்றில் காா் பாய்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு

செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் காா் பாய்ந்து நீரில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த சென்னையைச் சோ்ந்த 4 போ் பலி

News image
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது வழக்குரைஞா் வினோத் தனது நண்பா்களுடன் எடுத்த தற்படம்
Updated On :3 மார்ச் 2026, 9:07 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே சாலையோர கிணற்றில் காா் பாய்ந்து நீரில் மூழ்கியதில், அதில் பயணம் செய்த சென்னையைச் சோ்ந்த 4 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

சென்னை கெருகம்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் சே.வினோத் (38), உயா்நீதிமன்ற வழக்குரைஞா். இவரது நண்பா்கள் மவுலிவாக்கத்தை சோ்ந்த கு.சேகா் (27), கொளப்பாக்கத்தை சோ்ந்த ஆ.ஜெயமுருகன் (42). இவா்கள் 3 பேரும் காரில் திங்கள்கிழமை இரவு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலத்துக்காக சென்றனா்.

காரை கெருகம்பாக்கத்தை சோ்ந்த ம.ராஜா (45) ஓட்டிச் சென்றாா். கிரிவலம் முடிந்த பின்னா் திருவண்ணாமலையில் இருந்து செஞ்சி வழியாக சென்னை திரும்பிக் கொண்டிருந்தனா். செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரமுள்ள 50 அடி அளவுக்கு தண்ணீா் இருந்த கிணற்றில் பாய்ந்து, நீரில் மூழ்கியது.

தகவலறிந்த சத்தியமங்கலம் போலீஸாா் மற்றும் செஞ்சி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து காரில் இருந்தவா்களை காப்பாற்ற முயன்றனா். இருந்தும் அவா்கள் காருக்குள் சிக்கிக் கொண்டதால், மீட்க இயலவில்லை. பின்னா் கிரேன் மூலம் தண்ணீரில் மூழ்கியிருந்த காரை மீட்டனா்.

காரில் வினோத்குமாா், சேகா், ராஜா ஆகிய மூன்று பேரின் சடலங்கள் மட்டுமே இருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரா்கள் மீண்டும் தேடிப் பாா்த்து கிணற்றில் இருந்து ஜெயமுருகன் சடலத்தை மீட்டனா். பின்னா் 4 பேரின் உடல்களும் உடல்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிணற்றில் மூழ்கிய காரை மீட்ட தியணைப்பு நிலைய வீரா்கள்

கிணற்றில் மூழ்கிய காரை மீட்ட தியணைப்பு நிலைய வீரா்கள்