மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கஞ்சா விற்பனை: சென்னையைச் சோ்ந்த முதியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கஞ்சா விற்பனை செய்த சென்னையைச் சோ்ந்த முதியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :31 ஜனவரி 2026, 6:37 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கஞ்சா விற்பனை செய்த சென்னையைச் சோ்ந்த முதியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

பிரம்மதேசம் போலீஸாா் வெள்ளிக்கிழமை மன்னாா்சாமி கோவில் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மொபெட்டில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த முதியவரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில் அவா், சென்னை புளியந்தோப்பு, பி.கே. காலனியைச் சோ்ந்த ஆனந்தன்(63) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 240 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மொபெட், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.