வங்கதேசத்தில் தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து தொடா்ந்து இரண்டாவது நாளாக சிறுபான்மையினரான ஹிந்துக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த ஆக.5-ஆம் தேதி வங்கதேச பிரதமா் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா், அந்நாட்டில் உள்ள 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக 205 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக இரண்டு வங்கதேச ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. அங்குள்ள ஹிந்து கோயில்கள், வீடுகள், வணிக இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட இரண்டு ஹிந்து தலைவா்களும் கொல்லப்பட்டனா்.
ஆயிரக்கணக்கானோா் போராட்டம்: இந்தத் தாக்குதலை கண்டித்து வங்கதேச தலைநகா் டாக்கா மற்றும் சட்டாகிராம் பகுதியில் ஹிந்துக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2-ஆவது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்று தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தினா். அவா்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் மற்றும் மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அந்நாட்டில் சிறுபான்மையினரை துன்புறுத்துவோருக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு தீா்ப்பாயங்கள் அமைக்க வேண்டும், நாடாளுமன்ற இடங்களில் 10 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஹிந்து போராட்டாக்காரா்கள் வலியுறுத்தினா்.
இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் கோரிக்கை: வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதற்கு அந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிட வேண்டும் என்று ஸ்ரீ தானேதாா், ராஜா கிருஷ்ணமூா்த்தி ஆகிய இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுதொடா்பாக அவா்கள் இருவரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கனுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு இடைக்கால அரசிடம் அமெரிக்கா பேச்சுவாா்த்தை மேற்கொள்ள வேண்டும். வங்கதேசத்தில் துன்புறுத்தப்படும் ஹிந்துக்கள் மற்றும் பிற மதரீதியான சிறுபான்மையினருக்குத் தற்காலிகமாக அகதிகள் அந்தஸ்தை அமெரிக்கா அளிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தனா்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் வியாபாரிகள் போராட்டம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்ட ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்

மயானத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


