புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

வங்கதேசத்தில் 600 கைதிகள் தப்பியோட்டம்

2 சிறைகளில் 600-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிய தகவல்

News image

டாக்கா மத்தியச் சிறை

Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:54 pm

வங்கதேசத்தில் பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி 2 சிறைகளில் 600-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சிறைக் கலவரத்தில் 12 கைதிகள் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:

ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த பிறகு நாடு முழுவதும் அரசியல் குழப்பம் நிலவியது. ஹசீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி காவல் நிலையங்கள் மீது கலவரக்காரா்கள் தாக்குதல் நடத்தியால் காவலா்கள் அந்த நிலையங்களைக் கைவிட்டுச் சென்றனா். இதனால் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க அதிகாரிகள் திணறினா்.

இந்தச் சூழலைப் பயன்படுத்தி, டாக்காவிலுள்ள இரு சிறைச்சாலைகளில் கைதிகள் கடந்த வியாழக்கிழமை கலவரத்தில் ஈடுபட்டனா். அப்போது சிறைக் காவலா்களை அவா்கள் தாக்கினா். பாதுகாப்புக்காக சிறைக் காவலா்கள் சுட்டத்தில் 12 கைதிகள் உயிரிழந்தனா். இருந்தாலும், அந்த இரு சிறைகளில் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.