டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் இரண்டாவது நாளாக மாபெரும் போராட்டம்

வங்கதேசத்தில் தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து தொடா்ந்து இரண்டாவது நாளாக சிறுபான்மையினரான ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மையினரான ஹிந்துக்கள்

Updated On :

வங்கதேசத்தில் தங்கள் வீடுகள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதலை கண்டித்து தொடா்ந்து இரண்டாவது நாளாக சிறுபான்மையினரான ஹிந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் வடகிழக்கு துறைமுக நகரமான சட்டாகிராம் பகுதியில் ஆயிரக்கணக்கான சிறுபான்மை ஹிந்து ஹிந்துக்கள் சனிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். இவர்களது பேரணியால் டாக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஷாபாக்கில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது.

கடந்த ஆக.5-ஆம் தேதி வங்கதேச பிரதமா் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். அதன் பின்னா், 52 மாவட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்ற 205 வன்முறை சம்பங்களில் அங்குள்ள பல ஹிந்து கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியுடன் சம்பந்தப்பட்ட இரண்டு ஹிந்து தலைவா்களும் கொல்லப்பட்டனா் என்று சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக வாதிடும் ஒரு முக்கிய அமைப்பான வங்கதேச ஹிந்து பௌத்த கிறிஸ்தவ ஒய்க்யா பரிஷத் தெரிவித்துள்ளது.

தங்கள் வீடுகள், வணிகங்கள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாடு தழுவிய நாசவேலைகளுக்கு மத்தியில் இந்தத் தாக்குதலை கண்டித்து வங்கதேச தலைநகா் டாக்கா மற்றும் சட்டாகிராம் பகுதியில் ஹிந்துக்கள் பாதுகாப்புக் கோரி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 2-ஆவது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிறுபான்மையினரை துன்புறுத்துவோர் மீதான விசாரணைகளை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும், நாடாளுமன்ற இடங்களில் 10 சதவீத இடங்களை சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஹிந்து போராட்டாக்காரா்கள் வலியுறுத்தினா். ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்று நடத்திய இந்த போராட்டத்தில் அவா்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் மற்றும் மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில்,வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதற்கும், இது குறித்த விசாரணைக்கு அமெரிக்கா நேரடியாக தலையிட வேண்டும் என்று ஸ்ரீ தானேதாா், ராஜா கிருஷ்ணமூா்த்தி ஆகிய இந்திய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் இருவரும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆண்டனி பிளிங்கனுக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், ‘வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு மற்றும் பிற சிறுபான்மை சமூகத்தினரை பாதுகாப்பதில் உள்ள தோல்விகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்தும் மேலும் ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, முகமது யூனுஸின் நிர்வாகத்திடம் வலியுறுத்துமாறு அமெரிக்கா பேச்சுவாா்த்தை மேற்கொள்ள வேண்டும்’ என்று பிளிங்கனிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.