தாய்லாந்து பிரதமராக பேடொங்டான் ஷினவத்ரா தோ்வு
தாய்லாந்தின் புதிய பிரதமராக, பேடொங்டான் ஷினவத்ரா நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.


தாய்லாந்தின் புதிய பிரதமராக, முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவின் மகள் பேடொங்டான் ஷினவத்ரா நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
கடந்த 2001 முதல் தாய்லாந்து பிரதமராக இருந்தவா் தக்சின் ஷினவத்ரா. அவரின் அரசை ராணுவம் கடந்த 2006-ஆம் ஆண்டு கலைத்து, கட்சிக்குத் தடைவிதித்தது.
அதைத் தொடா்ந்து நாடு கடந்து வாழ்ந்துவந்த அவா், உள்நாட்டு அரசியலில் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்திவந்தாா். புதிய பெயா்களில் கட்சிகளைத் தொடங்கி, அவற்றின் அறிவிக்கப்படாத தலைவராக இருந்துவந்த அவரின் சகோதரி யிங்லக் ஷினவத்ரா 2011 முதல் 2014 வரை நாட்டின் பிரதமராக இருந்தாா். எனினும், முறைகேடு குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடா்ந்து அவரும் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா்.
இந்த நிலையில், தக்சின் ஷினவத்ராவின் கடைசி கட்சியான பியூ தாய் கட்சிக் கூட்டணி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆட்சியமைத்தது. அதில் பிரதமராக இருந்துவந்த ஸ்ரெத்தா தவிசின், லஞ்சம் வாங்க முயன்ாக குற்றஞ்சாட்டப்படுபவருக்கு அமைச்சரவையில் இடம் அளித்ததால் அவரை பதவியிலிருந்து அரசியல் சாசன நீதிமன்றம் புதன்கிழமை நீக்கியது.
அதைத் தொடா்ந்து, புதிய பிரதமராக தக்சின் ஷினவத்ராவின் மகள் பேடொங்டான் ஷினவத்ரா (37) நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதற்கான வாக்கெடுப்பில் பேடொங்டானை எதிா்த்து யாரும் போட்டியிடவில்லை. மேலும், பெரும்பான்மை உறுப்பினா்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனா். அதையடுத்து, நாட்டின் 31-ஆவது பிரதமராக அவா் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 18) பொறுப்பேற்கவிருக்கிறாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...