47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அமெரிக்காவில் ஆந்திர மருத்துவர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவில் திருப்பதியைச் சேர்ந்த மருத்துவர் சுட்டுக்கொலை...

News image
Updated On :26 ஆகஸ்ட் 2024, 11:16 am

DIN

அமெரிக்காவில் திருப்பதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் மருத்துவர் ரமேஷ் பாபு பெராம்ஷெட்டி. அவருக்கு வயது 63. ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் 1986-ஆம் ஆண்டு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற இவர், அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் மேற்படிப்பு பயின்றவர்.

அவருக்கு திருமணமாகி 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவின் டஸ்கலூஸாவின் அலபாமா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மருத்துவர் ரமேஷ் பாபு பெராம்ஷெட்டி, மருத்துவத் துறையில் 38 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர் ஆவார். அலபாமாவில் ’கிரிம்ஸன் கேர் நெட்வொர்க்’ என்ற மருத்துவக் குழுவை நிறுவி அதன்மூலம் மருத்துவச் சேவையாற்றி வந்தார்.

இந்த நிலையில், அலபாமா நகரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று(ஆக. 23) அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் டஸ்கலூஸா மட்டுமல்லாது, பிற பகுதிகளிலும் சேவையாற்றி சமூகத்தில் மதிப்புமிக்க மனிதராக திகழ்ந்தவர் மருத்துவர் ரமேஷ் பாபு பெராம்ஷெட்டி. அவர் ஆற்றிய தொண்டைப் பாராட்டும் விதமாக, டஸ்கலூஸா பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திர பிரதேசத்தில் தான் பயின்ற பள்ளியின் மேம்பாட்டுக்காக ரூ. 14 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். இது போன்ற சமூக சேவைகள் பலவற்றில் தன்னை தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டவராவார்.

கரோனா பெருந்தொற்று உலகம் முழுதும் பரவி உயிர்சேதங்களை ஏற்படுத்திய இக்கட்டான காலத்தில், நோயாளிகளை சிறப்பாகக் கவனித்து சிகிச்சையளித்தமைக்காக அவருக்கு விருதுகள் பல வழங்கியும் கௌரவிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மருத்துவர் கொலை வழக்கு குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.