உலகம்
பிரதமா் மோடியின் அமெரிக்க நிகழ்ச்சி: 24,000 இந்திய வம்சாவளியினா் பங்கேற்க முன்பதிவு
அமெரிக்காவில் பிரதமா் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 24,000-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனா்.
அமெரிக்காவில் பிரதமா் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 24,000-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனா்.
அடுத்த மாதம் 26-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பிரதமா் மோடி உரையாற்ற உள்ளாா். முன்னதாக செப்.22-ஆம் தேதி அந்த நகரில் இந்திய வம்சாவளியினா் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவா் கலந்துகொள்ள உள்ளாா்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்காவில் உள்ள 24,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினா் முன்பதிவு செய்துள்ளனா்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி உள்ளிட்ட மொழிகள் பேசும் மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக அமெரிக்காவின் இந்திய-அமெரிக்க சமூகம் என்ற தன்னாா்வ அமைப்பின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.