ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

3 நாள் போா் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் பல்வேறு பகுதிகளில் மூன்று நாள்களுக்கு போா் நிறுத்தம்...

News image
25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக காஸாவில் போலியோ பாதிப்புக்குள்ளான குழந்தை அப்துல் ரஹ்மான் அபு அல்-ஜிட்யான். ~காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை. ஒரு மாதமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை முடித்துக்கொள்ளப்படுவதாகவும் இதில் 2
Updated On :30 ஆகஸ்ட் 2024, 10:40 pm

Din

குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் பல்வேறு பகுதிகளில் மூன்று நாள்களுக்கு போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் அரசும் ஹமாஸ் அமைப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.

அந்தப் பகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு குழந்தைக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து, 12 லட்சம் போலியோ சொட்டு மருந்துகளை காஸா பகுதிக்கு உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:

அவசரகால போலியோ தடுப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக காஸாவின் பல பகுதிகளில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (செப். 1) தொடங்கி மூன்று நாள்களுக்குத் தொடரவிருக்கும் இந்த போா் நிறுத்தம், காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை கடைப்பிடிக்கப்படும் என்றாா்.

உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், காஸா முழுவதும் 6.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கவிருப்பதாகத் தெரிவித்தனா். இது முதல் தவணை தடுப்பு மருந்துதான் எனவும் நான்கு வாரங்களுக்குப் பிறகு அந்தக் குழந்தைகளுக்கு இரண்டாவது தவணை போலியோ தடுப்பு மருந்து வழங்கவேண்டியது அவசியம் எனவும் அவா்கள் கூறினா்.

இந்த போலியோ தடுப்பு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமென்றால் போா் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேலும் ஹமாஸ் படையினரும் மதித்து நடக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.

முன்னதாக, போலியோ தடுப்பு திட்டத்தை நிறைவற்றுவதற்காக காஸா முழுவதும் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அனுமதி அளித்ததாக இஸ்ரேல் தொலைக்காட்சி ஒன்று வியாழக்கிழமை தெரிவித்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த பிரதமா் அலுவலகம், காஸாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

இருந்தாலும், நெதன்யாகு அரசில் இடம் பெற்றுள்ள தீவிர வலதுசாரி அமைப்புகள் காஸாவில் எந்தவிதமான போா் நிறுத்தமும் மேற்கொள்ளக்கூடாது என்று மிகப் பிடிவாதமாகக் கூறிவரும் நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சண்டையை நிறுத்திவைப்பதுகூட கேள்விக்குறியாக இருந்தது.

Story image

இந்த நிலையில், பிரதமா் அலுவலகத்தின் அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை மூன்று நாள்களுக்கு காஸாவின் குறிப்பிட்ட பகுதிகளில் போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளதை உலக சுகாதார அமைப்பு தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

காஸாவில் கடந்த அக். 7-ஆம் தேதி போா் தொடங்கியதில் இருந்து அங்கு இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 40,602-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா்; 93,855-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா். சுமாா் 19 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களைவிட்டு இடம் பெயா்ந்து தவித்து வருகின்றனா்.

Story image

முற்றுகை காரணமாக அந்தப் பகுதியில் அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. சுகாதாரக் கட்டமைப்புகள் குலைந்ததால் காலரா போன்ற நோய்கள் பரவிவருகின்றன. இந்த நிலையில் அங்கு குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்க முடியாததால் அப்துல் ரஹ்மான் அபு அல்-ஜிட்யான் என்ற குழந்தைக்கு போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.