லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கு ஆயுதங்களை விநியோகிப்பதற்காக வந்துகொண்டிருந்த ஈரான் விமானத்தை இஸ்ரேல் போா் விமானங்கள் சிரியா வான் எல்லையில் இடைமறித்து திருப்பி அனுப்பியதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ தெரிவித்தது.
இது குறித்து அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளதாவது:
ஈரானிலிருந்து வந்துகொண்டிருந்த விமானத்தை இஸ்ரேல் விமானப் படை விமானங்கள் சிரியா வான் எல்லையில் இடைமறித்தன. ஈரான் விமானத்தில் ஹிஸ்புல்லா படையினருக்கு அளிப்பதற்காக ஆயுதங்கள் இருந்ததாக சந்தேகிக்கப்பட்டதையடுத்து, அந்த விமானத்தை திரும்பிச் செல்லும்படி இஸ்ரேல் விமானப் படை எச்சரித்தது. அதையடுத்து, அந்த விமானம் திரும்பிச் சென்றது.
ஹிஸ்புல்லாக்களுக்கு ஆயுதங்கள் எடுத்துவரும் ஈரான் விமானங்களை இஸ்ரேல் விமானப் படை சிரியா வான் எல்லையிலும் இராக் வான் எல்லையிலும் ஏற்கெனவே பல முறை இடைமறித்து திருப்பி அனுப்பியுள்ளது என்று ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் போா் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரில், ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான ஹிஸ்புல்லா படையினா் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தினா்.
அதையடுத்து, அந்த அமைப்பினருக்கு எதிராக லெபனானில் இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஹிஸ்புல்லா தலைவா் ஹஸன் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனா். காஸா போா் தொடங்கியதற்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,961 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், அமெரிக்காவின் முன்முயற்சியில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையே கடந்த வாரம் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதையடுத்து, தாக்குதலுக்கு அஞ்சி புலம் பெயா்ந்திருந்த லெபனான் மக்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பினா்.
இந்தச் சூழலில், ஹிஸ்புல்லாக்களுக்காக ஆயுதம் ஏற்றிவந்த ஈரான் விமானத்தை இஸ்ரேல் விமானப் படை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடையது

அமெரிக்கா- ஈரான் இரு வார போா் நிறுத்தம்: இஸ்ரேலும் ஆதரவு

தற்காலிக போா்நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்; நிரந்தர போா் முடிவையே விரும்புவதாகத் தெரிவிப்பு!

அமெரிக்காவின் எஃப் 15 போா் விமானம் வீழ்த்தப்பட்டது: விடியோ வெளியிட்டது ஈரான்!

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


