
அமெரிக்காவில் பில்லியன் டாலர் முதலீடு செய்பவர்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். டிரம்ப் ஆன் ட்ரூத் என்ற தனது எக்ஸ் பக்கத்தில் டிரம்ப், ``அமெரிக்காவில் ஒரு பில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையில் முதலீடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான சுற்றுச்சூழல் ஒப்புதல்களும் விரைவில் அனுமதி வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு பல்வேறு நிறுவனத்தினரிடையே வரவேற்பு பெற்றிருந்தாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு குறித்து ``பெரிய ஏலதாரரிடம் அமெரிக்காவை டிரம்ப் விற்றதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு’’ என்று எவர்கிரீன் ஆக்ஷனின் நிர்வாக இயக்குனர் லீனா மொஃபிட் விமர்சித்துள்ளார்.
அமெரிக்க தேசிய சுற்றுச்சூழல் கொள்கைச் சட்டத்தின்படி, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்குமுன், அரசு நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விளைவுகளை மதிப்பிட வேண்டும். இத்தகைய மதிப்பீடுகள் தொடர்பான தாமதங்கள் குறித்து நீண்டகாலமாக பல நிறுவனங்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், டிரம்ப்பின் அறிவிப்பு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், தேசிய சுற்றுச்சூழல் கொள்கைச் சட்டத்தை மீறியதுடன், இது சட்டவிரோதமானது என்று கூறிவரும் அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்புகள், டிரம்ப்பின் அறிவிப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.