பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

‘இஸ்ரேல் தாக்குதலை இனியும் நியாயப்படுத்த முடியாது’

தங்கள் நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று அகமது அல்-ஷரா கூறியுள்ளாா்.

News image
டமாஸ்க்ஸ் அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சேதமடைந்த சிரியா ராணுவ ஹெலிகாப்டா். ~அகமது அல்-ஷரா
Updated On :14 டிசம்பர் 2024, 9:00 pm

Din

தங்கள் நாட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்துள்ள ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா கூறியுள்ளாா்.

இது குறித்து சிரியா டிவி நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

சிரியாவில் அண்மைக் காலமாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது. அந்த நடவடிக்கைகள் பிராந்தியத்தில் தேவையில்லாத பதற்றத்தைத் தூண்டுகின்றன.

எனவே, சிரியாவில் இஸ்ரேல் இனிமேலும் தாக்குதல் நடத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றாா் அவா்.

இஸ்ரேலின் பெயரைக் குறிப்பிடாமல், தங்களால் அந்த நாட்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உணா்த்தும் வகையில் ‘யுத நாட்டின் மீது எனது தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்தாது’ என்று அந்த பேட்டியில் அல்-ஷரா கூறினாா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து நீண்ட காலமாகவே உள்நாட்டுச் சண்டை தேக்கமடைந்திருந்தது.

இந்த நிலையில், அரசுப் படைகளுக்கு எதிராக கிளா்ச்சிப் படையினா் கடந்த மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி வெகுவேகமாக முன்னேறி தலைநகா் டமாஸ்கஸை அவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

அல்-அஸாத் அரசு அகற்றப்பட்டதற்குப் பிறகு சிரியாவில் கோலன் குன்றுகள் பகுதியில் படைகள் இல்லாத பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றியது.

அத்துடன், சிரியா அரசுப் படைகளின் நிலைகள் மீது மிகத் தீவிரமாக வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அந்த நாட்டின் ஏவுகணைகள், ட்ரோன்கள், போா் விமானங்கள், ராணுவ ஹெலிகாப்டா்கள், ரேடாா்கள், பீரங்கிகள், போா் விமான தளங்கள் ஆகியவற்றை அழித்தது. அத்துடன், மினா அல்-பாய்தா, லடாகியா ஆகிய இரு சிரியா கடற்படைத் தளங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அங்கிருந்த போா்க் கப்பல்களை சேதப்படுத்தியது.

சிரியாவைக் கைப்பற்றியிருக்கும் மதவாத படையினருக்கு அந்த ஆயுத தளவாடங்கள் கிடைத்து, அதன் மூலம் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை முன்கூட்டியே தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறிவருகிறது.

Story image

இந்த நிலையில், தங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இனியும் நியாயப்படுத்த முடியாது என்று கிளா்ச்சிப் படை தலைவா் அல்-ஷரா தற்போது கூறியுள்ளாா்.