37 பேருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைப்பு: ஜோ பைடன் அறிவிப்பு
அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அதிபா் ஜோ பைடன்


வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 40 பேரில், 37 பேருக்கு அந்த தண்டனை பரோலில் வெளியே வரமுடியாத ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.
அந்த குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவா்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையைப் பகிா்ந்துகொள்கிறேன். இருந்தாலும், மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டிலிருந்தே மத்திய நீதிமன்றங்களால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்தன. ஆனால் கடந்த முறை டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்தததற்குப் பிறகு, அத்தகைய தண்டனைகளை நிறைவேற்ற கடந்த 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.
இந்தச் சூழலில், நாட்டின் அதிபராக டிரம்ப் அடுத்த மாதம் மீண்டும் பொறுப்பேற்கவுள்ளாா். எனவே, அவா் வருவதற்கு முன்னா் மத்திய மரண தண்டனைக் கைதிகளின் உயிரைப் பாதுகாக்கும் வகையில் ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளாா்.
ஏற்கெனவே, அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட சுமாா் 1,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பொதுமன்னிப்பு வழங்கியது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மகன் ஹன்டா் பைடனுக்கு அவா் பொதுமன்னிப்பு வழங்கியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...