தாகத்தில் காஸா குழந்தைகள்!

ஜனவரியில் பாலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 1.5 முதல் 2 லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது.
தாகத்தில் காஸா குழந்தைகள்!

இஸ்ரேல் ஹமாஸுக்கு இடையேயான போரில் பாலஸ்தீன மக்களின் ரத்தம் தினமும் காஸா மண்ணில் வடிந்துகொண்டேயிருக்கிறது. அப்பாவி மக்களின் அத்தியாவசியத் தேவைகள் எதுவும் காஸாவிற்குள் நுழையாமல் தடுப்பதில் இஸ்ரேல் உறுதியாக உள்ளது. 

26,000-த்திற்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ளது. அதில் 11,000-த்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் என காஸா சுகாதார அமைச்சகம் கண்ணீர் விடுகிறது. 

காஸாவில் குடிநீருக்குகூட மக்கள் போராடிவருகிறார்கள். தெற்கு காஸாவில் உள்ள பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தும் தினசரி எடுத்துக்கொள்ளவேண்டிய தண்ணீர் அளவில் வெறும் 2% சதவீதம் மட்டுமே கிடைப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த மாதம் பாலஸ்தீன மக்களுக்கு நாளொன்றுக்கு வெறும் 1.5 முதல் 2 லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் கிடைத்துள்ளது. உலக சுகாதார மையம் பாலஸ்தீன மக்களுக்கு ஒரு நாளுக்கு 100 லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

காஸாவிற்குள் போதுமான அளவு உணவு, தண்ணீர், எரிபொருள்கள் செல்வதை இஸ்ரேல் கடந்த அக்டோபர் 9-லிருந்து தடுத்துவருகிறது. அவ்வப்போது ஒருசில மனிதநேய உதவிகள் காஸா மக்களுக்கு அனுப்பப்பட்டாலும் போதுமான அளவுக்கான அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com