பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பின் அவசர ஊர்திக் குழு காணாமல் போயிருப்பதாக அந்த அமைப்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. ஆறு வயது சிறுமியை மீட்பதற்காக சென்ற அவசர ஊர்தியுடன் எந்த தகவல் தொடர்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமை ஹின்ந் எனும் சிறுமி தனது இறந்துபோன பெற்றோருடன் கார் ஒன்றுக்குள் சிக்கியிருப்பதாக கிடைத்த தகவலினடிப்படையில், பாலஸ்தீன செஞ்சுலுவை அமைப்பின் பணியாளர்களான யூசுப் சைனோ மற்றும் அகமது அல் - மதோன் ஆகியோர் அவசர ஊர்தியில் விரைந்தனர்.
66 மணிநேரத்திற்குப் பிறகும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை என அந்த அமைப்பு வலைதளத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: தாகத்தில் காஸா குழந்தைகள்!
பொதுமக்கள், மருத்துவ மற்றும் மனிதநேய உதவிப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சர்வதேச அமைப்புகளின் தலையீடு அவசியம் என பாலஸ்தீன செஞ்சிலுவை அமைப்பு கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

