டெஸ்லா கார்களில் பாதுகாப்பு குறைபாடு?

டெஸ்லா இதுவரை விற்பனை செய்த கார்கள் அனைத்திலும் இந்த குறைபாடு உள்ளதாக தெரிகிறது.
டெஸ்லா கார்களில் பாதுகாப்பு குறைபாடு?

தானாகவே இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெஸ்லா, பாதுகாப்பு குறைப்பாட்டினால் இதுவரை அமெரிக்காவில் விற்பனை செய்த அனைத்து கார்களுக்கும் புதிய அழைப்பை விடுத்துள்ளது.

காரின் கட்டுப்பாட்டு திரையில் உள்ள சில எச்சரிக்கை விளக்குகள் போதிய அளவில் இல்லை என தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத் துறையின் அறிவுறுத்தலின்பேரில் டெஸ்லா இந்த அழைப்பை விடுத்துள்ளது.

டெஸ்லாவின் எஸ், எக்ஸ், வொய், 3, சைபர்டிரக் உள்ளிட்ட அனைத்து கார்களையும் அழைத்துள்ள டெஸ்லா, புதிய மென்பொருளைத் தரவிறக்கம் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பாதுகாப்பு துறை, டெஸ்லா கார்களில் பிரேக், பார்க்கிங், பிரேக் விடுவிப்பு ஆகியவற்றைச் சுட்டும் விளக்குகள் போதியளவில் இல்லை எனத் தெரிவித்துள்ளது. முக்கியமான பாதுகாப்பு சார்ந்த தகவல்களை வாசிக்க இயலாததால் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

ஜன.8 ஆம் தேதி நடத்தப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில் இந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் எதுவும் நிகழவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com