அமேசானின் புதிய ஏ.ஐ என்ன செய்யும்?

அமேசான் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு உதவக்கூடிய புதிய ரஃபஸ் செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 
அமேசானின் புதிய ஏ.ஐ என்ன செய்யும்?

இன்றைய சூழலில் எந்த வலைதளத்திற்குச் சென்றாலும் குட்டி செய்யறிவு தொழில்நுட்பம் ஒன்று எட்டிப் பார்த்து 'உதவி வேண்டுமா?' எனக் கேட்கின்றன. சாட் ஜிபிடி, பார்டு, க்ராக், ஜெமினி ஆகிய ஏற்கனவே வணக்கம் வைத்திருக்கும் செய்யறிவு தொழில்நுட்பங்களிடம் நாம் முழுதாக அறிமுகமாகிடாத நிலையில், மற்றொரு செய்யறிவை நம் கையில் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது அமேசான் நிறுவனம்.  

அலெக்ஸா எனும் வாய்மொழிக் கட்டளைகளை பின்பற்றும் தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வமே இன்னும் அடங்கிடாதபோது, அமேசானில் நாம் பொருள்களை வாங்க உதவும் செய்யறிவை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது.  

ரஃபஸ் (Rufus) என்ற பெயர் கொண்ட இந்த செய்யறிவு தொழில்நுட்பம், நம்மிடம் எழுத்து வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளக் கூடியது. அமேசானில் உள்ள பொருள்களின் தரவு மற்றும் பொதுவான வலைதளத் தரவுகளைக் கொண்டு பயிற்சி பெற்றிருக்கும் இந்த ரஃபஸ் கடந்த வெள்ளிக்கிழமை உலகிற்கு அறிமுகமாகியுள்ளது. 

உதாரணத்திற்கு இந்த ரஃபஸிடம், எந்த வகையான காப்பி மேக்கர் (Coffee maker) சிறப்பாக விற்பனையாகிறது எனக் கேட்டால் அதை எடுத்துக்காட்டுகிறது. மேலும் பல நிறுவனங்களின் காப்பி மேக்கர்களை ஆராய்ந்து விலை குறைந்தவற்றைத் தனியாக எடுத்துக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, இதில் எந்த வகை காப்பி மேக்கரை எளிதாகக் கழுவலாம் எனக் கேட்டாலும் அந்தப் பொருளைத் தனியாகக் காண்பிக்கிறது.

'நான் மாடித்தோட்டம் போட நினைக்கிறேன்' எனக் கூறினால் அதற்குத் தேவையான பொருள்களை நாம் விரும்பும் விலையில் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்துகிறது இந்த புதிய தொழில்நுட்பம்.  

இதைப் போன்று, பொருள்களைப் பற்றி நாம் முழுதாகத் தெரிந்துகொண்டு தரமான, சரியான பொருள்களை வாங்க இந்தத் தொழில்நுட்பம் உதவும் என அமேசான் நிறுவனம் தெரிவிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com