இஸ்ரேல் தாக்குதலுக்கு ஒரே இரவில் 92 பேர் பலி!

இஸ்ரேல் ராணுவம் ராஃபா பகுதியில் நடத்திய தாக்குதலில் 92 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஒரே இரவில் 92 பேர் பலி!

இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான சண்டையில் அப்பாவி மக்களின் இரத்தம் அருவிபோல் காஸா முழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் நூறுக்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்கிறது. இதுவரை 27,000த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று மாதத்தில் நேற்றய இரவு விதிவிளக்கல்ல. ராஃபா பகுதியில் ஒரே இரவில் 92 பேரை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரவு திடீரென நடந்த குண்டு வெடிப்புச் சம்பங்களால் 92 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

குழந்தைகள் பூங்காவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இரவு முழுதும் தாக்குதல்களிலிருந்து உயிர் பிழைக்கப் போராடிய மக்கள், காலையில் அங்குள்ள மருத்துவமனையின் முன் கூடி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

காஸாவின் மக்கள் அனைவரும் தங்களது, உணவு, உறைவிடம், உரிமைகளை இழந்து உயிரைக் காத்துக்கொள்ள தற்காலிக தங்குமிடங்களிலும், முகாம்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். 

கடந்த அக்டோபர் 7 முதல் துவங்கிய இந்தப் போரில் இதுவரை 27,238 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 11,000-த்திற்கும் அதிகமானோர் குழந்தைகள் எனக் கண்ணீர் விடுகிறது பாலஸ்தீன சுகாதார அமைச்சகம். போரில் இதுவரை 225 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 24 வயதான ராணுவ வீரர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com