பீஜிங் : சீனாவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவால் சாலைகளில் படர்ந்துள்ள பனியின் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹாண் பகுதி நெடுஞ்சாலைகளில் பனி தேங்கியதால், திங்கள்கிழமை இரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் வெகு தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதை காண முடிந்தது.
சுமார் 4000 வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.இதனைத் தொடர்ந்து போக்குவரத்தை சீர்செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை போக்குவரத்து சீராகும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய சீனாவில் இதுவரை இல்லாத அளவாக ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு புதன்கிழமை வரை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் சனிக்கிழமையன்று லூனார் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, மக்கள் குடும்பம் குடும்பமாக இரவு நேரங்களில் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்காகவும், சொந்த ஊர்களுக்கும் வாகனங்களில் படையெடுத்ததால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: 20 அமைச்சர்கள் பதவியேற்பு!

தவெக இதைச் செய்ய வேண்டும்: மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்! | CPI | TVK |
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



