கால்நடைகளை சுட்டுக்கொல்லும் காணொலி, மீண்டுமொரு சர்ச்சையில் இஸ்ரேல்!

கான் யூனிஸ் தெருக்களில் திரிந்த ஆடுகளை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்கொல்லும் காணொலி இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
இணையத்தில் பரவும் சர்ச்சைக் காணொலி | Instagramaljazeera
இணையத்தில் பரவும் சர்ச்சைக் காணொலி | Instagramaljazeera


இஸ்ரேல் - ஹமாஸுக்கு இடையேயான போரில் காஸா மண்ணில் ரத்தம் காய்ந்தபாடில்லை. இஸ்ரேல் தொடர்ந்து பல போர் குற்றங்களைச் செய்துவருவதாக சர்வதேச அமைப்புகள் ஓயாமல் குற்றம் சாட்டிவருகின்றன. எனினும் இஸ்ரேலின் குண்டு மழை ஓயவில்லை. 

காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இதனால் மக்கள் உயிருக்கு பயந்து தங்குமிடங்களிலிருந்து வெளியில் வருவதில்லை. 

அசையும் பொருள்களையும் அனைத்தையும் சுட்டு வீழ்த்தும் டிரோன்களையும் இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்திவருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தின. 

இந்நிலையில், காஸாவின் கான் யூனிஸ் தெருக்களில் சுற்றித்திருந்த ஆடுகளை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லும் காணொலி வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அல்ஜசீரா ஊடகம் பதிவிட்ட காணொலி காஸா மக்களின் அவல நிலையைக் காட்டுவதாக அமைந்துள்ளது. 

இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு இதுவே சாட்சியென பலர் வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com