மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பாலஸ்தீனக் குழந்தை மீது ராணுவ நாயை ஏவிய இஸ்ரேல்!

4 வயது பாலஸ்தீனக் குழந்தை மீது இஸ்ரேல் ராணுவ நாயை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
பாதிக்கப்பட்ட குழந்தை| DCIP
Updated On :8 பிப்ரவரி 2024, 11:27 am

DIN

காஸாவின் அனைத்து பகுதிகளிலும் ராணுவ சோதனைகளை மேற்கொண்டு தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொலை செய்துவருகிறது. நான்கு வயது குழந்தை மீது இஸ்ரேலின் ராணுவ நாய் ஏவப்பட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த பிப்.4-ல் ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் ராணுவ நாயை இஸ்ரேல் அவிழ்த்துவிட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில் இருந்த நான்கு வயது சிறுவன் இப்ராஹிம் ஹஷாஷ்-ஐ ராணுவ நாய் கடித்துக்குதற ஆரம்பித்துள்ளது. சிறுவனுக்கு ரத்தம் ஊற்றுமளவுக்கு நாய் தொடர்ந்து கடித்துள்ளது. 

மூன்று நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் தொடர்ந்ததாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் இஸ்ரேல் ராணுவத்தினர் நாயைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவன் நப்ளஸில் உள்ள ரஃபிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான். 

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனக் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அலட்சியம் செய்துவருவதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட இயக்குநர்  அயெட் அபு இக்டாய்ஷ் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட சிறுவன் இப்ராஹிமுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தனது நாய்கள் மூலம் பொதுமக்களையும், குழந்தைகளையும் தொடந்து தாக்கிவருகிறது என அந்த அமைப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்த காணொலியை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.