சீன புத்தாண்டை வரவேற்ற மக்கள்! : படங்கள்

கொண்டாட்டங்கள், குடும்ப சந்திப்புகள், வழிபாடு மூலமாக மக்கள் சீன புத்தாண்டின் முதல் நாளை வரவேற்றுள்ளனர்.
புத்தாண்டை வரவேற்கும் சீன மக்களின் வழிபாடு| AP
புத்தாண்டை வரவேற்கும் சீன மக்களின் வழிபாடு| AP

சீன புத்தாண்டு தொடங்கியது. மிக முக்கிய விழாவாக சீனாவில் கருதப்படும் இந்த புத்தாண்டு விடுமுறை நாளில் சீன மக்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்களோடு இணைந்து கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

புத்தாண்டு விலங்கான டிராகன் உடன் செல்பி எடுக்கும் சீனர்கள் | AP
புத்தாண்டு விலங்கான டிராகன் உடன் செல்பி எடுக்கும் சீனர்கள் | AP

சீன நம்பிக்கையின் அடிப்படையில் 12 விலங்குகள்- ஆண்டுகளின் பெயராக ஒவ்வொரு ஆண்டும் மாறும். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு டிராகன் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

புத்தாண்டுக்கு பொருள்களை வாங்க குவிந்த மக்கள் | AP
புத்தாண்டுக்கு பொருள்களை வாங்க குவிந்த மக்கள் | AP

சீன மக்கள் இந்தாண்டில் குழந்தைகளைப் பெற்றுகொள்ள விரும்புவர். டிராகன் போலவே பலம், ஆற்றல் மற்றும் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

மலேஷியாவில் புத்தாண்டு வழிபாடு| AP
மலேஷியாவில் புத்தாண்டு வழிபாடு| AP

சீன கலாச்சாரத்தில் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிறத்தில் மக்கள் ஆடைகளை அணிவர். குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து அன்பளிப்புகளை சிவப்பு நிற உறையில் பெறுவர்.

திபெத்திய துறவிகள் | AP
திபெத்திய துறவிகள் | AP

சீனாவின் வசந்த கால தொடக்க நாளான புத்தாண்டு, சீனாவில் மட்டுமல்லாமல் ஹாங்காங், தென்கொரியா, வியட்நாம், மியான்மர், மலேஷியா மற்றும் இந்திய தர்மாசாலாவில் உள்ள திபெத் துறவிகள் வரை கொண்டாடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com