இஸ்ரேலுக்கு ஆதரவாக விளம்பரம்! பாலஸ்தீன ஆதரவாளர்கள் பதிலடி!

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்வது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றம் கூறிய நிலையில் தசர்வதேச மக்களின் ஆதரவைப் பெற இஸ்ரேல் பல முயற்சிகளைச் செய்துவருகிறது.
இஸ்ரேல் வெளியிட்ட காணொலி | X
இஸ்ரேல் வெளியிட்ட காணொலி | X

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், போர் குற்றங்களை நியாயப்படுத்த விளம்பரம் ஒன்றை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

சூப்பர் பவுல் எனப்படும் கால்பந்துப் போட்டிக்கான நேரத்தில் இஸ்ரேல் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்றில் இஸ்ரேல், அனைத்து தந்தைகளையும் மீண்டும் வீடு திரும்ப வைக்கவே இஸ்ரேல் இந்தப் போரைத் தொடர்ந்துவருகிறது என்ற கருத்தைப் பரப்ப முயற்சித்துள்ளது.

அந்த விளம்பரத்தில் 'பாசமான தந்தைகளே, விளையாட்டான தந்தைகளே, சாகசம் செய்யும் தந்தைகளே உங்கள் அனைவரையும் விரைவில் வீடு திரும்ப வைப்போம்' எனும் வசனங்கள் இடம்பெறுகின்றன.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் வகையில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் வெளியிட்ட விளம்பரத்தில் காஸாவில் இறந்த குழந்தைகளுடன் தந்தைகள் கதறி அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் 'வீரமான தந்தைகளே, பொறுமையான தந்தைகளே, இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட தந்தைகளே உங்கள் அனைவருக்கு நியாயம் பெற்றுத் தருவோம்' என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

சர்வதேச அமைப்புகள் அனைத்தும் இஸ்ரேலின் போர் குற்றங்களையும், இரக்கமற்ற தாக்குதல்களையும் கண்டித்துவரும் நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து தன் தாக்குதல்களையும் கொலைகளையும் நியாயப்படுத்த முயற்சிகள் செய்கிறது.

இஸ்ரேலின் கொடூரத்தாக்குதல்களுக்கு இதுவரை 28,000த்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com