சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காஸா எல்லையில் புதிய சுவர்: எகிப்தின் திட்டம் என்ன?

போரை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் முடிவு பாலஸ்தீனர்களை இடம்பெயரச் செய்யும் என எகிப்து கவலையுறுகிறது.

News image
ராபா எல்லையில் புதிய சுவர்- AP
Updated On :16 பிப்ரவரி 2024, 1:32 pm

DIN

ராபாவில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தவுள்ள நிலையில் எகிப்து நாடு, காஸாவின் எல்லையையொட்டிய தனது பிராந்திய பகுதிகளில் சுவர் எழுப்பி வருகிறது.

எல்லை பகுதியையொட்டிய நிலத்தை உயர்த்தும் பணிகளிலும் எகிப்து ஈடுபட்டுள்ளதைச் செயற்கைகோள் வழியாக பெறப்படும் படங்களில் இருந்து அசோசியேடட் பிரஸ் உறுதி செய்துள்ளது.

சுவர் எழுப்பி வருவது குறித்து எகிப்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ராபாவில் தஞ்சம் அடைந்துள்ள லட்சக்கணக்கான மக்கள், இஸ்ரேல் போரை விரிவுப்படுத்தினால் எகிப்து எல்லைக்குள் நுழையும் அபாயம் நிலவுகிறது.

ராபா எல்லையில் புதிய சுவர்

ராபா எல்லையில் புதிய சுவர்

1979் ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையை மீறும் செயல் என இது குறித்து இஸ்ரேலை எகிப்து பல முறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் காஸாவின் மேற்கு எல்லையில் ஷேக் ஜுவைத்- ராபா நகரங்களை இணைக்கும் சாலையையொட்டி 3.5 கிமீ தொலைவுக்குச் சுவர் கட்டுமானம் நடைபெற்று வருகிற செயற்கை கோள் படங்களை மேக்ஸர் டெக்னாலஜீஸ் வெளியிட்டுள்ளது.

20 சதுர கிமீ அளவுக்கு சுவரால் தடுக்கப்பட்ட பகுதியை எகிப்து உருவாக்குவதாகவும் அதில் 1 லட்சம் பேர் அளவுக்கு தஞ்சம் அடையலாம் என எகிப்து அதிகாரி தெரிவித்ததாக வால் ஸ்டீரிட் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் தரப்பிலும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.