லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்AP

31 ஆயிரம் வான்வழி தாக்குதல்: இஸ்ரேல் தகவல்

காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

காஸா முழுவதும் இஸ்ரேல் படைகள் ஹமாஸுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை விரிவுப்படுத்தி வரும் நிலையில், காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் தீவிர தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வான்வழி, டாங்குகள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மூலம் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒரு இடத்தில் ஆர்பிஜி ஏவுகணை மற்றும் துப்பாக்கிகள் வைத்திருந்த பயங்கரவாதிகளை மிக நெருங்கிய தூரத்தில் ராணுவ வீரர்கள் கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

அந்த பகுதியிலுள்ள ஹமாஸ் படையினரின் ஆயுத கிடங்கை இஸ்ரேலின் தரைவழி ராணுவப் படை தகர்த்துள்ளது.

அக்.7 போர் தொடங்கியது முதல், இஸ்ரேல் ராணுவம் காஸா மற்றும் லெபனானில் இதுவரை 31 ஆயிரம் வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.

காஸாவில் பலி எண்ணிக்கை 29 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் இஸ்ரேல் தெற்கு நோக்கி தாக்குதலை விரிவுப்படுத்த அங்குள்ள மக்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்
காஸா: 29 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com