சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

டிக்டாக் மீது நடவடிக்கை எடுக்க இந்தோனேசிய அரசு முடிவு!

தொடர் விதிமீறல்களை டிக்டாக் மேற்கொண்டு வருவதால் அரசு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

News image

மாதிரி படம் - Pixabay

Updated On :20 பிப்ரவரி 2024, 12:51 pm

செயலி வழியாக விற்பனை் செய்யப்படுவதைத் தடுக்கும் இந்தோனேசியாவின் விதியை விடியோ செயலியான டிக்டாக் தொடர்ந்து மீறிவருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பொருள்கள் விற்கப்படுவதை இந்தோனேஷிய அரசு, பயனர்களின் தகவல் பாதுகாப்பு கருதியும் சிறு விற்பனையாளர்களின் நலன் கருதியும் தடை செய்தது.

டிக்டாக் அறிமுகப்படுத்திய டிக்டாக் ஷாப் என்கிற இணைய விற்பனை சேவை இதனால் கடந்த ஆண்டு முடக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தோனேஷியாவின் மிகப்பெரிய இணைய விற்பனை நிறுவனமான டோகோபிடியாவின் 75.01 சதவிகித பங்குகளை டிக்டாக்கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ், டிசம்பரில் வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசிய சிறு, குறு தொழில் துறை அமைச்சர் டெடென் மஸ்டுகி, டிக்டாக் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடுவதால் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.