காஸாவில் உயரும் பலி எண்ணிக்கை: தீர்வு எப்போது?

பலி எண்ணிக்கை அதிகரிப்பு: காஸாவில் அமைதி திரும்புமா?
ராபா கட்டட குவியலுக்கு மத்தியில் பாலஸ்தீனர்
ராபா கட்டட குவியலுக்கு மத்தியில் பாலஸ்தீனர்AP

காஸாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 48 பேர் பலியாகியுள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் மூவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேலியர் ஒருவர் பலியானார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளது.

முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்குவதற்கு முன்பு பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் ராபாவில் தாக்குதல் நடத்தவுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

வியாழக்கிழமை நாளின் தொடக்கத்தில் ஏழு இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசியதில் பெரிய மசூதி உள்பட பல்வேறு கட்டடங்கள் தரைமட்டமாகின.

மத்திய காஸாவில் ஒரே நாள் இரவில் 44 பேர் தாக்குதலுக்கு பலியாகினர். அவர்களில் 14 பேர் குழந்தைகள் எனவும் 8 பேர் பெண்கள் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ராபா பகுதியில் ஒரு வீட்டின் மீது நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், குழந்தை உள்பட 4 பேர் பலியாகினர்.

அக்.7 முதல் நடந்துவரும் இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 29,400-ஐ கடந்துள்ளது.

ராபா கட்டட குவியலுக்கு மத்தியில் பாலஸ்தீனர்
மீண்டும் இஸ்ரேலியர்கள் மீது துப்பாக்கிச்சூடு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com